வரலாற்றில் முதல்முறையாக ஆண்கள் விளையாடும் போட்டியில் நடுவர்கள் அனைவரும் பெண்களாக இருப்பர் என்று ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு (Asian Football Confederation - AFC) சமீபத்தில் அறிவித்துள்ளது.
இவர்கள் ஆண்கள் காண்டினென்டல் சங்கக் கோப்பைப் போட்டியில் நடுவர்களாகப் பங்கு பெறவிருக்கின்றனர்.
இந்தத் தனித்துவ சிறப்பைப் பெறும் பெண் நடுவர்கள் பின்வருமாறு : ஜப்பானைச் சேர்ந்த நோமி தெசிரோஹி, மோஹோடோ போசோனோ மற்றும் யோஷிமி யாமாசிட்டா ஆகியோராவர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்மணிகளான அலைசன் ப்ளைன் மற்றும் சாராக் கோ ஆகியோர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற AFC கோப்பைப் போட்டியில் துணை நடுவர்களாக பங்கு பெற்ற முதலாவது பெண்மணிகளாக உருவெடுத்துள்ளனர்.