TNPSC Thervupettagam

பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கு எதிராக சகிப்புத்தன்மையல்லாததற்கான சர்வதேச தினம் - பிப்ரவரி 06

February 7 , 2020 1695 days 377 0
  • பெண் பிறப்புறுப்பு சிதைவை (Female Genital Mutilation - FGM) ஒழிப்பதற்கான ஐ.நா.வின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்நாளானது  முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் மனித உரிமைகளை மீறும் நடவடிக்கையான FGM குறித்த விழிப்புணர்வை இந்நாள் பரப்புகின்றது.
  • இந்த ஆண்டுக்கான கருப்பொருள் - “இளைஞர் சக்தியைப் பரப்புதல்: சுழிய பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஒரு பத்தாண்டு காலம்” என்பதாகும்.
  • இந்தக் கருப்பொருளானது 2030 ஆம் ஆண்டுக்குள் FGMஐ ஒழிப்பதின் மீது கவனம் செலுத்த இருக்கின்றது.
  • இந்த நடைமுறையானது பொதுவாக ஆப்பிரிக்காவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் வழக்கத்தில் உள்ளது.
  • 2008 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியமும் யுனிசெஃப்பும் இணைந்து FGMஐ ஒழிப்பதற்கான மிகப்பெரிய உலகளாவியத் திட்டத்திற்குத் தலைமை தாங்கின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்