கனடா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரான கிறிஸ்டியா ப்ரீலாண்டு (Chrystia Freeland) கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் (European Union) ஆகியவை கூட்டிணைந்து 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலகின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பை (world's first female foreign ministers' meeting) நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெண் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பின் கூடுகைக்கு 30 நாடுகளைச் சேர்ந்த பெண் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அழைக்கப்படுவர் என கனடா அரசு தெரிவித்துள்ளது.
பெண்களுக்கான அதிகாரமளிப்பின் (women's empowerment) மீது உலகளாவிய விவாதத்தினை ஆழப்படுத்துவதற்காக இந்த உலகின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு நடத்தப்படுகின்றது.