TNPSC Thervupettagam

பெண்களின் சுகாதார நலனில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான செயல்திட்டம் குறித்த அறிக்கை

February 23 , 2025 11 hrs 0 min 4 0
  • இந்த அறிக்கையானது உலகப் பொருளாதார மன்றம் மற்றும் மெக்கின்சி சுகாதார நிறுவனம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது.
  • ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்கள் தங்கள் வாழ்நாளில் 25% நாட்கள் அதிகமாக உடல்நலம் குன்றிய நிலையில் வாழ்கின்றனர்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பாதிப்பு நிலைகள், பெண்களின் சுகாதார இடைவெளியில் 1/3 பங்கினைக் கொண்டுள்ளன.
  • கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய், பேறுகாலத்திய உயர் இரத்த அழுத்தக் கோளாறுகள் போன்றவை அவர்களின் ஆயுட்காலத்தினையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும் நிலைகளும் இதில் அடங்கும்.
  • இந்த சுகாதார இடைவெளியை நிவர்த்தி செய்வது, 2040 ஆம் ஆண்டிற்குள் உலகின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1 டிரில்லியன் டாலரை உருவாக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்