பெண்களின் தலைமையில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்கள் - இந்தியா
December 29 , 2024 112 days 189 0
இந்தியப் புத்தொழில் நிறுவனங்கள் முன்னெடுப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட குறைந்த பட்சம் ஒரு பெண் இயக்குனரைக் கொண்ட சுமார் 73,000க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.
இது அரசாங்கத்தினால் ஆதரிக்கப்படும் 1,57,066 புத்தொழில் நிறுவனங்களில் சுமார் பாதி எண்ணிக்கையினைக் குறிக்கிறது.
2023 ஆம் ஆண்டில், உள்நாட்டு தொழில்நுட்பத் துறைக்கான ஒரும் ஒட்டு மொத்த நிதி உதவியில் 13% ஆன 1.1 பில்லியன் டாலர் நிதி பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது.
சுமார் 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன் நிறுவனங்களுடன், இந்தியாவானது உலகளவில் மிகத் துடிப்பு மிக்க புத்தொழில் நிறுவன சூழல் அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்து உள்ளது.