பெண்களுக்கான தொழில்நுட்ப வழிகாட்டிகள் என்னும் தனித்துவ நிகழ்ச்சியின் நோக்கம் STEM/தொழில்நுட்பம் (Science, Technology, Engineering and Mathematics/அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) ஆகிய துறைகளின் மூத்த நிலையில் பெண்களின் தலைமைப் பண்புகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் துறைகளில் அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் திறன் ஆகியவற்றை அதிகப்படுத்துவதாகும்.
இந்நிகழ்ச்சியானது முக்கியத் தொழில்நுட்பமான தகவல் தொழில் நுட்பம் (IT), தகவல் தொழில் நுட்பத்தால் செயல்படுத்தப்பட்ட சேவைகள் (ITES)/வணிக செயல்முறை மேலாண்மை (BPM), உற்பத்தி பொருள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் (R & D) ஆகிய துறைகளில் முற்றிலும் பெண்கள் தொழில் பண்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.
இது நாஸ்காம் (NASSCOM- National Association of Software and Services Companies), நாஸ்காம் துறைத் திறன்கள் மன்றம் மற்றும் இந்தியாவின் தரவுப் பாதுகாப்பு மன்றம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
W2RT (Women Wizards Rule Tech) ஆனது 2018ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நாஸ்காம் டி அண்ட் ஐ (D and I) உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்டது.
நாஸ்காம் (NASSCOM)
மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசியச் சங்கம் என்பது இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை புற ஒப்படைப்பு (BPO) ஆகியவற்றின் வர்த்தக மன்றம் ஆகும்.
நாஸ்காம் அமைப்பானது லாப நோக்கமற்ற நிறுவனமாக 1988-ல் தொடங்கப்பட்டது.
நாஸ்காமின் தலைமையிடம் புது தில்லியில் அமைந்துள்ளது. நாஸ்காமின் பிராந்திய அலுவலகங்கள் பெங்களுரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, பூனே மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.