ஓடிசாவில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற இடங்களில் பெண்களுக்கு தனது கட்சியான பிஜு ஜனதா தளம் 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்ற இடங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கோருவதற்கான தீர்மானத்தை ஒடிசா மாநில சட்டசபை கடந்த ஆண்டு நிறைவேற்றியது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது வரும் மக்களவைத் தேர்தலுக்காக 42 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலில் 33 சதவிகிதத்தை விட அதிகமாக 40 சதவிகிதம் அளவிற்கு 17 பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.