பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நவம்பர் 19
November 28 , 2024 25 days 74 0
இது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு உலகளாவிய முயற்சியாகும்.
1979 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான உடன்படிக்கையினை (CEDAW) ஏற்றுக் கொண்டது.
2008 ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக UNiTE என்றப் பிரச்சாரத்தைத் தொடங்கியதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபை மற்றொரு குறிப்பிடத் தக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
உலகளவில், 736 மில்லியன் பெண்கள் உடல் ரீதியிலான மற்றும்/அல்லது பாலியல் ரீதியான வன்முறையை எதிர் கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Every 10 Minutes, a woman is killed. #NoExcuse. UNiTE to End Violence against Women” என்பதாகும்.