TNPSC Thervupettagam

பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நவம்பர் 25

November 27 , 2018 2190 days 1281 0
  • பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமானது உலகமெங்கிலும் நவம்பர் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இவ்வருடத்தின் கருத்துரு “Orange the World: #HearMeToo” என்பதாகும்.
  • ஒவ்வொரு மாதத்தின் 25-ம் தேதியும் 2009-ல் தொடங்கப்பட்ட ‘Say NO – UNiTE to End Violence against Women’ என்ற ஐ.நா. மகளிர் அமைப்பின் பிரச்சாரத்தினால் ஆரஞ்சு தினமாக அத்தினம் நியமிக்கப்பட்டது.
  • இந்த தினமானது 1960 ஆம் ஆண்டில் ரஃபேல் துருஜில்லோவின் சர்வாதிகார ஆட்சியின் போது டொமினிகன் குடியரசில் கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் ஆர்வலர்களான 3 மிராபல் சகோதரிகளின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
  • ஐ.நா. பொதுச் சபையானது 2008 பிப்ரவரி 7 அன்று இதன் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு அதிகாரப் பூர்வமாக நவம்பர் 25-ம் தேதியை அத்தினமாக நியமித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்