TNPSC Thervupettagam

பெண்கள் உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை

March 9 , 2025 23 days 90 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பானது, “Women’s Rights in Review 30 Years After” என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • ஐ.நா. பெண்கள் அமைப்பானது, பெய்ஜிங்+30 செயல்பாட்டு நிரலையும் வெளியிட்டு உள்ளது.
  • பாலினச் சமத்துவத்தினை ஆதரிப்பதற்காக வேண்டி 1995 ஆம் ஆண்டு முதல் சுமார் 1,531 சட்டச் சீர்திருத்தங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஆண்கள் கொண்டுள்ள சட்ட உரிமைகளில் 64 சதவீதத்தை மட்டுமே பெண்கள் கொண்டுள்ளனர்.
  • 88 சதவீத நாடுகளில் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும், அவற்றின் அமலாக்கம் சீரற்றதாகவே உள்ளது மற்றும் முக்கியமானச் சேவைகளுக்கான நிதி உதவி போதுமானதாக இல்லை.
  • பெண்கள், ஆண்களை விட சராசரியாக சுமார் 20 சதவீதம் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர்.
  • பெண்கள் தற்போது, உலகளாவியப் பாராளுமன்ற இடங்களில் 27 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளனர் என்ற நிலையில் இது 1995 ஆம் ஆண்டில் 11 சதவீதமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்