லட்டிவியாவின் ரீகாவில் நடைபெற்ற ரீகா தொழில்நுட்ப பல்கலைக்கழக ஓபன் செஸ் போட்டியில் இறுதிப் போட்டியை நிறைவு செய்ததையடுத்து 17 வயதுடைய R.வைசாலி பெண்கள் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
சமீபத்தில் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரக்னா நந்தாவின் மூத்த சகோதரி R.வைசாலி ஆவார்.
பத்மஸ்ரீ கொனேரு ஹம்பி, சுபாராமன் விஜயலட்சுமி மற்றும் ஹரிக்கா டிரோனாவல்லி ஆகியோரைக் கொண்ட சிறப்புப் பட்டியலில் வைசாலியும் இணைந்துள்ளார்.
கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கு, வீரர் 3 இயல்களைப் பெற வேண்டும். மேலும் கலப்பு ELO மதிப்பீடான 2500 புள்ளிகளைப் பெற வேண்டும்.