பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்களுக்கான உலகளாவிய நிதி - 2024
March 26 , 2025 7 days 88 0
உலகளாவியத் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் நிறுவிய 69,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன என்பதொடு அவை கூட்டாக இன்றுவரையில் 309 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளன.
2024 ஆம் ஆண்டில், பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் மொத்த நிதியில் 11.7% பங்கினை மட்டுமே கொண்டிருந்தன.
உலக அளவில் பெண்கள் தலைமையிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் 29.6 பில்லியன் டாலர் பங்கினைப் பெற்றன.
இது 2023 ஆம் ஆண்டில் பதிவான 33.1 பில்லியன் டாலரில் இருந்து 11% சரிவையும், 2022 ஆம் ஆண்டில் பதிவான 37.5 பில்லியன் டாலரில் இருந்து 21% சரிவையும் குறிக்கிறது.
இந்தியாவில் பெண்கள் தலைமையிலான செயலில் உள்ள சுமார் 7,000க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன என்ற ஒரு நிலையில் இது நாட்டிலுள்ள அனைத்து செயலில் உள்ள புத்தொழில் நிறுவனங்களில் 7.5% ஆகும்.
பெண் நிறுவனர்களைக் கொண்ட நிறுவனங்களால் திரட்டப்பட்ட அனைத்து நேர நிதி உதவியின் அடிப்படையில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சுமார் 26 பில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த மூலதனத் திரட்டலுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.