TNPSC Thervupettagam

பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முதல் விண்வெளி நடைபயணம்

March 10 , 2019 1960 days 652 0
  • மார்ச் 29 அன்று பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளவிருக்கும் முதலாவது விண்வெளி நடைபயணத்தை நாசா நடத்தவிருக்கின்றது.
  • 1984 ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று சோவியத்தைச் சேர்ந்த ஸ்வெட்லானா சாவிட்ஸ்கயா விண்வெளியில் நடை பயணம் மேற்கொண்ட முதலாவது பெண்மணியாக உருவெடுத்த 35 ஆண்டுகளுக்குப் பிறகு இது நடைபெறவிருக்கிறது.
  • இந்த விண்வெளி நடை பயணமானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனைகளான அனி மெக்லைன் மற்றும் கிரிஸ்டினா கோச் ஆகியோரால் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
  • கடைசியாக கோடை காலத்தில் பொருத்தப்பட்ட மின்கலன்களை மாற்றுவதற்காக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த நடைபயணம் தோராயமாக 7 மணி நேரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நாசா மார்ச் மாதத்தை பெண்களின் வரலாற்று மாதமாக அனுசரிக்கிறது. பொறியியல், விண்வெளி மற்றும் கணிதம் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் குறித்த தகவல்களுக்காக தனது விண்வெளி நிறுவனத்தில் ஒரு வலைப் பக்கத்தை அது ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்