TNPSC Thervupettagam

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சமமான ஊதியத்திற்கான சட்டம்

April 22 , 2018 2312 days 688 0
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் கேபினெட் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சமமான ஊதியத்திற்கான சட்டத்தை இயற்றுவதற்கான முன்மொழிவை வழங்கியுள்ளது.
  • புதிய சட்டம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படுதலை உறுதி செய்யும்.
  • இந்த சட்டம் இயற்றலுக்கான முன்மொழிவானது, பெண்களின் உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் தேசிய மேம்பாட்டு நடைமுறைகளில் பெண்களின் செயல்பாடுகளை ஆதரித்தல் ஆகியவற்றை உறுதி செய்யும் அரசின் நோக்கத்தின் வரிசையில் அமைந்துள்ளது.
  • கடந்த சில ஆண்டுகளாக, ஐக்கிய அரபு அமீரக அரசானது பாலின சமத்துவத்திற்கான ஐக்கிய அரபு அமீரகக் கழகத்தை 2015-ல் நிறுவியது உட்பட பல்வேறு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளின் மூலமாக நாட்டில் பாலின இடைவெளியை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரக அரசு உலகின் முதல் பாலின சமச்சீர் வழிகாட்டியை (Gender Balance Guide) செப்டம்பர் 2017ல் தொடங்கியது.
  • இந்த வழிகாட்டியானது, பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டிற்கான நிறுவனத்தால், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாலின சமச்சீர் கழகத்துடன் கூட்டிணைந்து 2017 இல் தயாரிக்கப்பட்டது.
  • ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதன் நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படாத பெண்களின் ஆற்றல் வளத்தை மேம்படுத்த இவ்வழிகாட்டி ஒரு வரைபடத்தை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்