TNPSC Thervupettagam

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம்

April 23 , 2025 17 hrs 0 min 36 0
  • ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் (WCD) ஆனது, சமீபத்தில் "பருவநிலை மாற்றம் ஆனது வேளாண் சூழலியல் மண்டலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளில் எத்தகையப் பாதிப்பினை ஏற்படுத்துகிறது" என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் பல்வேறு பருவநிலை மற்றும் நிலப் பரப்புகளுடன் கூடிய 20 வேளாண் சூழலியல் மண்டலங்கள் உள்ளன.
  • ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றில் தலா ஐந்து வேளாண் சூழலியல் மண்டலங்கள் காணப்படுகின்றன.
  • வடகிழக்கு மலைகள் சார்ந்த (17வது) சூழலியல் மண்டலம் ஆனது மொத்தம் ஒன்பது மாநிலங்களில் பரவியுள்ளது.
  • மேற்கு கரையோரச் சமவெளி (19வது) சார்ந்த சூழலியல் மண்டலமானது மொத்தம் எட்டு மாநிலங்களில் பரவியுள்ளது.
  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அவர்களின் சிறிய உடல், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பராமரிப்பாளர்களைச் சார்ந்திருப்பதன் நிலை ஆகியவை காரணமாக அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்