பெண்ணையாறு நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை குறித்து ஒரு பேச்சுவார்த்தை நடத்தியதன் வாயிலாக குழு தயாரித்த ஒரு அறிக்கையை பதிவு செய்யுமாறு மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1956 ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகள் என்ற சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் ஒரு புதியப் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்குமாறு நீதிமன்றம் ஆனது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மத்திய அரசிற்கு உத்தரவு இட்டது.
இரு மாநிலங்களுக்கிடையில் ஒரு தீர்மானத்தினைக் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சியை மேற்கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில், இந்த ஆற்றில் தடுப்பணைகள் மற்றும் சில நீரோட்ட மாற்றுக் கட்டமைப்புகள் தொடர்பான கர்நாடக அரசின் பணிகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இரு மாநிலங்களுக்கு இடையேயான இந்த நதியின் நீர் ஒரு தேசியச் சொத்து என்றும் அதன் மீது எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர முடியாது என்றும் தமிழ்நாடு வாதிட்டது.
நதி நீர் தொடர்பான 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஆனது, ஒப்பந்ததார மாநிலங்கள் மீது "செல்லுபடியாகும் தன்மை உடையது மற்றும் பிணைப்பு தன்மை கொண்டது" என்றும் தமிழ்நாடு அரசு வாதிட்டது.