TNPSC Thervupettagam

பென்குயின் காலனி

April 26 , 2019 2042 days 652 0
  • உலகின் இரண்டாவது மிகப்பெரிய பென்குயின் காலனியான அண்டார்டிகாவில் உள்ள ஹேலி வளைகுடாப் பகுதியானது ஏறக்குறைய அழிந்து விட்டது.
  • பிரிட்டீஷ் அண்டார்டிகா கணக்கெடுப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பென்குயின் குஞ்சுகள் அங்கு இறந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
  • 2016 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவின் வெடல் கடலில் உள்ள “கடற் பனிக் கட்டிகளானது” சூறாவளியினால் தாக்கி அழிக்கப்பட்ட போது ஏராளமான பென்குயின் குஞ்சுகள் கடலில் மூழ்கி இறந்தன.
  • பருவநிலை மாற்றமானது 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் சூறாவளிகளை ஏற்படுத்தி அந்த இடத்தில் ஏராளமான பென்குயின் குஞ்சுகளை அழித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்