TNPSC Thervupettagam

பென்சில் (PENCIL)

September 27 , 2017 2616 days 3374 0
  • மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட பென்சில் எனும் (PENCIL- Platform For Effective Enforcement For No child Labour) மின்னணு தளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • தேசிய குழந்தை தொழிலாளர் பாதுகாப்புத் திட்டம் (NCLP – National Child Labour Project) குழந்தை தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக 1988ல் ஏற்படுத்தப்பட்ட ஓர் மத்தியத் துறை திட்டமாகும். (Central Sector Scheme).
  • தேசிய குழந்தை தொழிலாளர் பாதுகாப்புத் திட்டத்தின் சட்டக் கூறுகளின் அமலாக்கத்திற்கு வலுவான செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு அமைப்பினை உருவாக்க இம்மின்னணு தளம் தொடங்கப்பட்டு உள்ளது
  • குழந்தை தொழிலாளர் இல்லா சமூகத்தை அடைய ஏற்படுத்தப்பட்ட NCLP-ன் திறனான விளைவுடைய செயல்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகளையும் , மாவட்ட நிர்வாகங்களையும், பொது மக்கள் மற்றும் சிவில் சமூக இயக்கங்களையும் ஒன்றிணைத்து ஈடுபடுத்தும் தளமாக பென்சில் அமையும்.
  • குழந்தை கண்காணிப்பு அமைப்பு, புகார்கள் தெரிவிக்குமிடம் போன்ற பல கூறுகள் இத்தளத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்