வரி ஏய்ப்புக் கண்காணிப்பு மீதான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (OECD - Organisation for Economic Co-operation and Development) திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அடிப்படைத் தேய்மானம் மற்றும் இலாப செயல் மாற்ற ஒப்பந்தம் (BEPS - Base Erosion and Profit Shifting) என்ற ஒரு பன்னாட்டு ஒப்பந்தத்தை இந்தியா உறுதி செய்திருக்கின்றது.
பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு பிராந்தியத்தில் இலாபங்களை ஈட்டுகின்றன.
ஆனால் இந்நிறுவனங்கள் குறைந்த அல்லது வரி விதிக்காத இடங்களுக்கு அவற்றை மாற்றுகின்றன.
இவை இறுதியாக சுழிய அளவிற்கு அல்லது மிகக் குறைந்த அளவிற்குப் பெருநிறுவன வரிகளை செலுத்துகின்றன.
BEPS என்பதன் நோக்கம் இது போன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதாகும்.