TNPSC Thervupettagam

பெயர் நீக்க உத்தரவு – UGC

November 14 , 2017 2596 days 833 0
  • பல்கலைக் கழகம் என்ற பெயரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் இனி பயன்படுத்தக்கூடாது. அப்பெயரை  உடனடியாக நீக்கிவிட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உத்தரவிட்டுள்ளது.
  • இது UGC சட்டப்பிரிவு 23 க்கு எதிராக உள்ளதென காரணம் சுட்டப்பட்டு, இந்தியாவில் உள்ள 123 நிகர்நிலைப் பல்கழைக்கழகங்கள் அவற்றின் பெயரில் உள்ள “பல்கலைக்கழகம்” எனும் பெயரை நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த உத்தரவை UGC வெளியிட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் 28 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.
  • இந்த உத்தரவை மீறும் நிகர்நிலைக் கல்வி நிறுவனங்கள் மீது  UGC  வழிகாட்டுதல் 2016-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பல்கலைக்கழகம் என்ற பெயருக்கு பதிலாக எந்த விதமான மாற்று வார்த்தையை பயன்படுத்தலாம் என்பது குறித்த பரிந்துரையை UGC-க்கு 15 நாட்களில் இந்த நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்