பல்கலைக் கழகம் என்ற பெயரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் இனி பயன்படுத்தக்கூடாது. அப்பெயரை உடனடியாக நீக்கிவிட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உத்தரவிட்டுள்ளது.
இது UGC சட்டப்பிரிவு 23 க்கு எதிராக உள்ளதென காரணம் சுட்டப்பட்டு, இந்தியாவில் உள்ள 123 நிகர்நிலைப் பல்கழைக்கழகங்கள் அவற்றின் பெயரில் உள்ள “பல்கலைக்கழகம்” எனும் பெயரை நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த உத்தரவை UGC வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 28 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இந்த உத்தரவை மீறும் நிகர்நிலைக் கல்வி நிறுவனங்கள் மீது UGC வழிகாட்டுதல் 2016-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்கலைக்கழகம் என்ற பெயருக்கு பதிலாக எந்த விதமான மாற்று வார்த்தையை பயன்படுத்தலாம் என்பது குறித்த பரிந்துரையை UGC-க்கு 15 நாட்களில் இந்த நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும்.