TNPSC Thervupettagam

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்

February 23 , 2022 1006 days 508 0
  • 2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளானது பிப்ரவரி 4 முதல் 20 வரையில் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்றது.
  • 7 விளையாட்டுத் துறைகளில் 15 பிரிவுகளில் 109 போட்டிகள் நடைபெற்றன.
  • பெய்ஜிங், யாங்கிங் மற்றும் சாங்கிஜியகோ ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடத்தப் பட்டன.
  • இந்தப் போட்டிகளின் தலைமைத்துவமானது, 2026 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக வேண்டி இத்தாலியின் மிலன் மற்றும் கார்டினா டி அம்பெசோவிடம் அதிகாரப் பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
  • மொத்தம் 37 பதக்கங்களை வென்று தொடர்ந்து 2 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் நார்வே முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • இது ஒரு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அதிகபட்ச தங்கப் பதக்கம் வெல்லப்பட்ட ஒரு புதிய சாதனையாகும்.
  • இதில் ஜெர்மனி 2வது இடத்தைப் பெற்றது.
  • இதில் சீனா 3வது இடத்தினைப் பெற்றது.
  • இந்தியாவின் சார்பாக ஆல்பைன் பனிச்சறுக்கு வீரர் ஆரிஃப் கான் இப்போட்டியில் பங்கேற்றார்.
  • இப்போட்டியில் இந்தியாவால் எந்த பதக்கமும் வெல்ல இயலவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்