2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளானது பிப்ரவரி 4 முதல் 20 வரையில் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்றது.
7 விளையாட்டுத் துறைகளில் 15 பிரிவுகளில் 109 போட்டிகள் நடைபெற்றன.
பெய்ஜிங், யாங்கிங் மற்றும் சாங்கிஜியகோ ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடத்தப் பட்டன.
இந்தப் போட்டிகளின் தலைமைத்துவமானது, 2026 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக வேண்டி இத்தாலியின் மிலன் மற்றும் கார்டினா டி அம்பெசோவிடம் அதிகாரப் பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
மொத்தம் 37 பதக்கங்களை வென்று தொடர்ந்து 2 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் நார்வே முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இது ஒரு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அதிகபட்ச தங்கப் பதக்கம் வெல்லப்பட்ட ஒரு புதிய சாதனையாகும்.
இதில் ஜெர்மனி 2வது இடத்தைப் பெற்றது.
இதில் சீனா 3வது இடத்தினைப் பெற்றது.
இந்தியாவின் சார்பாக ஆல்பைன் பனிச்சறுக்கு வீரர் ஆரிஃப் கான் இப்போட்டியில் பங்கேற்றார்.
இப்போட்டியில் இந்தியாவால் எந்த பதக்கமும் வெல்ல இயலவில்லை.