TNPSC Thervupettagam

பெய்டவ் – 3 வழிகாட்டு விண்கலம்

April 5 , 2018 2425 days 814 0
  • சீனா, இரண்டு இணை (Twin pair) பெய்டவ் – 3 MEO வகை விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
  • சீனா, தன்னுடைய உள்நாட்டு விண்கலமான பெய்டவ் (Compass) விண்கல வழிகாட்டு அமைப்பின் மூன்றாவது மற்றும் கடைசிக் கட்ட விண் செலுத்தலின் (Launching) ஒரு பகுதியாக பெய்டவ்-3 இணை விண்கலங்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
  • தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் விண்வெளி ஏவு மையத்திலிருந்து லாங் மார்ச் – 3B ராக்கெட் மூலம் இவை விண்ணில் செலுத்தப்பட்டன. லாங்க் மார்ச் ராக்கெட் வகையில் இத்திட்டம் 269வது திட்டமாகும்.
  • இவ்விரு விண்கலங்களும் பெய்டவ் விண்கல வழிகாட்டு அமைப்பின் மூன்றாவது கட்டத்தின் நடுத்தர புவி சுற்றுவட்டப் பாதை கூறு ஆகும்.
  • இவ்விரு இணை விண்கலங்கள் தொடர் சோதனைகளுக்குப் பிறகு இதற்கு முன்னால் ஏவப்பட்ட ஆறு பெய்டவ்-3 விண்கலங்களுடன் இணைந்து செயல்படும்.
  • இவ்விரு இணை விண்கலங்களும் முறையே அறிவியலுக்கான சீன நிறுவனத்தின் நுண்விண்கலங்களுக்கான புத்தாக்க நிறுவனம் மற்றும் ஏவு வாகன தொழில்நுட்பத்திற்கான சீன நிறுவனம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டன.

பெய்டெவ் நேவிகேசன் அமைப்பு

  • பெய்டெவ் வழிகாட்டு அமைப்பு ஆனது 2வது தலைமுறையைச் சேர்ந்த சீனாவினால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வழிகாட்டு அமைப்பு ஆகும். இது அமெரிக்காவின் GPS அமைப்புக்கு எதிரான ஒன்றாக கருதப்படுகிறது. பெய்டெவ் என்ற சீனமொழி வார்த்தையின் பொருள் ஏர்கலப்பை அல்லது Big dipper Constellation.
  • பெய்டெவ் விண்கலம் முதன்முதலாக 2000-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. 2011 டிசம்பரில் செயல்பாட்டிற்கு வந்த இந்த அமைப்பு, சீனாவிற்கு மட்டும் சேவை வழங்கும் 10 விண்கலங்களைக் கொண்டதாகும்.
  • 2012 டிசம்பரில் ஆசிய – பசுபிக் பகுதிகளில் தனது சேவைகளை வழங்க ஆரம்பித்தது. 2020ல் இதன் முடிவில் (On its completion) உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு தன் சேவையை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்