சீனா BDS – 3 பதிப்பின் கடைசி செயற்கைக்கோள் ஏவுதலை நிறைவு செய்துள்ளது.
இது பெய்டோ கண்காணிப்புச் செயற்கைக்கோள் அமைப்பின் மூன்றாவது தலைமுறையின் ஒரு பகுதியாகும். இது பெய்டோ அமைப்பின் 55வது செயற்கைக் கோளாகும்.
BDS - 3 (BeiDou Navigation Satellite System) ஆனது சீனாவின் மண்டல மற்றும் சாலை முன்னெடுப்பில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து உலகளாவிய கண்காணிப்புச் சேவையை வழங்கி வருகின்றது.
பெய்டோ என்பது மாண்டரின் மொழியில் ”பெரிய குவளைகள்” என்று பொருள்படும்.
இது அமெரிக்க அரசின் NAVSTAR உலகளாவியப் புவியிடங்காட்டி (GPS - Global Positioning System), ரஷ்யாவின் GLONASS (GLObal NAvigation Satellite System), ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ அமைப்பு ஆகியவற்றுடன் போட்டியிடுவதற்கான ஒரு முயற்சியாகும்.