அழிந்து வரும் கலிட்ரிஸ் டெனுயிரோஸ்ட்ரிஸ் (ஹார்ஸ்ஃபீல்ட், 1821) இனத்தினைச் சேர்ந்த ரஷ்யப் பறவை இனமான பெரிய உள்ளான் பறவையானது கேரளாவின் கடற்கரைக்கு வந்துள்ளது.
இவை குளிர்கால இருப்பிட வசதிக்காக 9,000 கி.மீ.க்கு மேலான தொலைவிற்குப் பறந்து வருகின்றன.
மத்திய ஆசியப் பறவைகளின் பறக்கும் பாதையில் (CAF) பயணிக்கும் புலம்பெயரும் பறவை இனங்கள் இரண்டில் ஒன்று இதுவாகும்.
மற்றொரு பறவை குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் கண்டறியப்பட்டது.