இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தினால் (Zoological Survey of India - ZSI) நடத்தப் பட்ட சமீபத்திய ஆய்வின்படி, இந்த வகை அணில் இனங்கள் அழியும் நிலையில் உள்ளன.
ZSI அமைப்பினால் மேற்கொள்ளப்படும் இதே வகையைச் சேர்ந்த முதலாவது ஆய்வு இதுவாகும்.
இந்தியாவில், இந்த இனங்கள் அதிக எண்ணிக்கையில் அசாம் மாநிலத்தின் காசிரங்கா தேசியப் பூங்காவிலும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் காணப் படுகின்றன.
பகல் நேர வாழ்வியான இந்தத் தாவர உண்ணிகள் மரங்களில் வாழ்கின்றன.
பெரிய மலேயன் அணில் அல்லது பெரிய கருப்பு அணில் ஆனது உலகில் மிகப்பெரிய மர அணில் இனங்களில் ஒன்றாகும்.
இந்தியாவானது பெரிய நரைத்த அணில், பெரிய இந்திய அணில் மற்றும் பெரிய மலேயன் அணில் ஆகிய 3 பெரிய அணில் இனங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கின்றது.