TNPSC Thervupettagam

'பெரிய, வலுவான, சிறந்த' பல்தரப்பு மேம்பாட்டு வங்கிகளுக்கான செயல் திட்டம்

October 30 , 2023 392 days 248 0
  • முன்னாள் அமெரிக்க கருவூலச் செயலர் லாரன்ஸ் சம்மர்ஸ் மற்றும் 15வது நிதி ஆணையத்தின் தலைவரான N.K.சிங் ஆகியோர் தலைமையிலான தற்சார்பு நிபுணர் குழுவானது அதன் அறிக்கையின் இரண்டாவது தொகுதியினைச் சமர்ப்பித்துள்ளது.
  • இந்த அறிக்கைக்கு ‘மும்மைச் செயல்பாட்டு நிரல்: சிறந்த, வலுவான மற்றும் பெரிய பல்தரப்பு மேம்பாட்டு வங்கிகளுக்கான செயல் திட்டம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
  • ஜூலை மாதம் G20 அமைப்பு நாடுகளின் அமைச்சர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் முதல் தொகுதியானது, 2030 ஆம் ஆண்டிற்குள் பல்தரப்பு மேம்பாட்டு வங்கிகளின் வருடாந்திரக் கடன் வழங்கீட்டு அளவை 390 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கு பரிந்துரைத்தது.
  • இந்தப் பரிந்துரைகள் பல்தரப்பு மேம்பாட்டு வங்கிகளின் திறன்களை மேம்படுத்தச் செய்வதையும், உலக மேம்பாட்டு முன்னுரிமைகளை மிகவும் திறம் மிக்க முறையில் கொண்டு செல்வதற்காக வேண்டி அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • பல்தரப்பு மேம்பாட்டு வங்கிகள் (MDBs) என்பது பல வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளை உள்ளடக்கிய அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்