திராவிடர் கழகமானது பெரியார் கொள்கை எனப்படும் இணைய வழி ஒளிபரப்பு சேவை (OTT) தளத்தினை தொடங்கியுள்ளது.
இது சமூக நீதிக்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் OTT தளம் ஆகும்.
இந்த OTT தளமானது சமயத்துடன் தொடர்புடைய பல்வேறு மூடநம்பிக்கைகள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுடனான நேர்காணல்கள், பகுத்தறிவு, திரைப் படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் பற்றிய பல்வேறு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.
இது பெரியாரின் சுயமரியாதை மற்றும் சமூக நீதிக்கான சித்தாந்தத்தை மேலும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களிடம் பரப்பச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.