TNPSC Thervupettagam

பெரியார் நதி நிற மாற்றம்

April 11 , 2019 1929 days 587 0
  • கேரள மாநிலத்தில் உள்ள பெரியார் நதியானது பாதாளம் கட்டுப்பாட்டு பாலத்திற்கு அருகில் கறுப்பு நிறமாக மாறியுள்ளது.
  • நீரின் மோசமான தரத்தின் காரணமாக பாசிவழி நீர் மாசு ஏற்பட்டுள்ளதால் இந்த நிற மாற்றம் நிகழ்ந்துள்ளது.
  • நீர் நிலைகளுக்கு அதிக அளவிலான கழிவுகள் சென்றடைவதால் பாசிகள் வளர்ச்சிக்கு இது வழி வகுக்கும்.
  • சில நாட்களுக்குப் பின்னர், இந்தப் பாசிகள் இறந்து, சிதைந்து விடும். இதன் விளைவாக ஒரு அருவருக்கத்தக்க வாசனை மற்றும் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படும்.
  • இந்த மாசுபாட்டிற்குத் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ஆகியவை சமபங்கு வகிக்கின்றன.
பெரியார் நதி
  • பெரியார் நதியானது கேரளாவில் உள்ள மிகப் பெரிய நீரை வெளியேற்றும் திறன் கொண்ட நீளமான நதியாகும்.
  • முல்லையார் நதி, முத்திரப்புழா நதி, செருதோனி நதி, பெரின்ஞன்குட்டி நதி மற்றும் எடமலை நதி ஆகியவை இதன் முக்கியத் துணையாறுகளாகும்.
முல்லைப் பெரியார் அணை
  • பெரியார் தேக்கடி ஏரி மற்றும் நீர்த்தேக்கம் ஆகியவற்றை உருவாக்குவதற்காக பெரியார் மற்றும் முல்லையாறு ஆகிய நதிகள் இணையும் இடத்தில் கட்டப்பட்ட அணை முல்லைப் பெரியார் அணையாகும்.
  • இவற்றிலிருந்து மலையிடுக்கின் வழியாக தமிழ்நாட்டிற்கு நீரானது திருப்பி விடப் படுகின்றது. இந்தத் திருப்பி விடப்பட்ட நீரானது மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப் படுகின்றது.
  • பின்னர் இது சுருளியார் (வைகை நதியின் ஒரு துணையாறு) நதியில் கலக்கின்றது. இதன் விளைவாக நீரானது வடிநிலப் பாசனத்திற்கு பயன்படுத்தப் படுகின்றது.
  • மேல் நீரார் அணை மற்றும் கீழ் நீரார் அணை ஆகியவை பெரியார் வடிநிலப் பகுதியின் தமிழ்நாட்டின் எல்லைக்குள் அமைந்த அணைகளாகும்.
  • முல்லைப் பெரியாறு அணையானது ஜான் பென்னி குயிக் என்பவரால் 1887 மற்றும் 1895 கால கட்டத்தில் கட்டப்பட்டது.
  • கேரளாவின் மிகப்பெரிய நீர்மின் திறன் திட்டமான இடுக்கி அணையானது பெரியார் நதியின் மீது அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்