TNPSC Thervupettagam

பெரிலியம் – 7 என்ற கதிரியக்கச் சிதைவு அணுக் கருவைப் பயன்படுத்திப் பருவமழை கணிப்பு

July 9 , 2019 1839 days 649 0
  • பெல்ஜியம் அணுக்கரு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த லுக்ரிசியா டெர்சி என்பவர் சிக்கலான இந்தியப் பருவ மழையைக் கணிப்பதற்கு அணுக்கரு வெடிப்புகளை கண்டறிவதற்கான சாதனங்களின் தரவுகளைப் பயன்படுத்தியுள்ளார்.
  • விரிவான அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO - Comprehensive Test Ban Treaty Organisation) கீழ் உள்ள சர்வதேச கண்காணிப்பு அமைப்பு நிலையங்கள் வளிமண்டலத்தின் கதிரியக்கச் சிதைவு அணுக்கருவின் அளவைத் தொடர்ந்து கண்காணிக்கின்றன.
  • இவர் பருவமழையைக் கணிப்பதற்கு கதிரியக்கச் சிதைவு அணுக்கருவான பெரிலியம் 7-ன் அளவை அறிந்துக் கொள்வதற்காக இரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள CTBTOவின் தரவுகளைப் பயன்படுத்தியுள்ளார்.
  • எப்பொழுதெல்லாம் பெரிலியம் 7 ஆனது ரஷ்யாவில் அதிகமாக உள்ளதோ, அப்பொழுதெல்லாம் பெர்லியம் 7ன் அளவு ஆஸ்திரரேலியாவில் குறைவாக இருக்கும்.
  • இரு நாடுகளின் தரவுகள் ஒன்றுக்கொன்று இணையும் புள்ளி “ஹெட்லி பெரல் குவிய மண்டலம்” (HFCZ - Hadley-Ferrel Convergence Zone) எனப்படும்.
  • HFCZ ஐ பருவக்கால மழையுடன் தொடர்புபடுத்த முடியும்.
  • இந்த முடிவு மூன்று நாட்கள் வித்தியாசத்துடன் (Error) இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மிகத் துல்லியமாக பருவமழையைக் கணிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்