TNPSC Thervupettagam

பெரு பகுதியில் கடற்சிங்கங்கள் உயிரிழப்பு

February 19 , 2023 518 days 234 0
  • பெருவில் சமீபத்திய வாரங்களில் ஏற்பட்ட H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றினால் சுமார் 585 கடற்சிங்கங்களும் 55,000 வனப்பறவைகளும் உயிரிழந்து உள்ளன.
  • உயிரிழந்தப் பறவைகளில் கூழைக்கடா, பல்வேறு வகையான கடற்பறவை மற்றும் செர்னான்ப் எனப்படும் பெங்குவின் வகை ஆகியவை அடங்கும்.
  • மூன்று கூழைக்கடா பறவைகளில் அதிகம் தொற்றக் கூடிய தொற்றுநோயான H5N1 நோய்ப் பாதிப்புகள் இருப்பது கண்டறிந்ததையடுத்து நவம்பர் மாதத்தில் அந்த நாட்டு அரசானது 180 நாள் சுகாதார எச்சரிக்கையை அறிவித்தது.
  • பறவைக் காய்ச்சலானது பாலூட்டிகளைப் பாதிப்பது அரிதான நிகழ்வு ஆகும், என்றாலும், இது மனிதர்களைப் பாதிப்பது மேலும் அரிதானதாகும்.
  • ஆனால் சமீபத்தில் பிரிட்டனில் உள்ள நரிகள் மற்றும் நீர்நாய்கள், பிரான்சில் உள்ள பூனை மற்றும் மொன்டானாவில் உள்ள கொடுங்கரடிகள் ஆகியவற்றில் இந்த வைரஸ் இருப்பது கண்டறியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்