இந்த முக்கியமான நெறிமுறையானது யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையத்தினால் கரீபியன் மற்றும் வடக்கு பிரேசில் கண்டத் திட்டுகளின் மீதான முக்கியக் கவனத்துடன் அறிவிக்கப்பட்டது.
இந்தப் பகுதிகள் பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்தவை என்பதோடு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 610 மில்லியன் டாலர் பங்குடன் அவற்றின் பவளப்பாறைகள் மற்றும் மீன்வளம் ஆனது உள்ளூர்ப் பொருளாதாரங்களுக்கு ஆதரவளிக்கின்றன.
வடக்குப் பிரேசில் கண்டத் திட்டு ஆனது, ஒரு மாபெரும் கடல் சார் சுற்றுச்சூழல் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு 500க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் உள்ளன என்பதோடு மேலும் இந்தப் பகுதி என்பது புயல்களுக்கு எதிரான ஓர் இயற்கை அரணாகச் செயல்படுகிறது.
இது UNDP/GEF PROCARIBE+ என்ற ஒரு திட்டத்தின் மூலம் உலகளாவிய சுற்றுச்சூழல் மையத்திடமிருந்து முதல் கட்டமாக 15 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, GEF மையத்தினால் வழங்கப்பட்ட மொத்தம் சுமார் 126.02 மில்லியன் டாலர் மதிப்பிலான கூட்டு நிதியுதவியிலிருந்தும் பயனடைந்துள்ளது.
இது போன்ற மற்றொரு முன்னெடுப்பு ஆன பவளப்பாறைகளுக்கான உலகளாவிய நிதியம் ஆனது இன்று வரை சுமார் 225 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ளது மற்றும் 2030 ஆம் ஆண்டிற்குள் 3 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.