TNPSC Thervupettagam

பெருங்கடல்களில் வாழும் உயிரினங்களைப் பாதுகாத்தல் - யுனெஸ்கோ

December 21 , 2024 11 hrs 0 min 29 0
  • யுனெஸ்கோ அமைப்பானது eDNA ஆய்வுப் பயணங்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்ட ‘பெருங்கடல்களில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பதில் சில சமூகங்களை ஈடுபடுத்துதல்’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • யுனெஸ்கோ அமைப்பின் கடல்சார் பல்லுயிர்ப் பெருக்க வரைபடமாக்கல் மீதான  ஒரு முன்னெடுப்பானது, சுற்றுச்சூழல் சார் டிஎன்ஏ (eDNA) மாதிரியைப் பயன்படுத்தி 21 உலகப் பாரம்பரியத தளங்களில் சுமார் 4,500 இனங்களை அடையாளம் கண்டுள்ளது.
  • இந்தத தளங்களில் 70 சதவீதத்திற்கும் மிகஅதிகமானவை பருவநிலை மாற்றத்தினால் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதோடு மேலும் இந்தப் பகுதிகள் அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள சுமார் 35% கடல் வாழ் இனங்களைக் கொண்டுள்ளன.
  • மிகவும் மோசமான ஒரு பருவநிலை மாற்றச் சூழ்நிலையில், இந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து மீன் இனங்களும் அவற்றின் வெப்ப சகிப்புத்தன்மை வரம்புகளை விஞ்சக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
  • SSP 8.5 அல்லது 'வழக்கம் போலான சூழல்' போக்கு எனவும் அழைக்கப்படும் இந்த ஒரு சூழ்நிலையானது நீடித்தால், நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 4.4 ° C ஆக உயரும் என்று குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்