பெருங்கடல்களில் வாழும் உயிரினங்களைப் பாதுகாத்தல் - யுனெஸ்கோ
December 21 , 2024 120 days 165 0
யுனெஸ்கோ அமைப்பானது eDNA ஆய்வுப் பயணங்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்ட ‘பெருங்கடல்களில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பதில் சில சமூகங்களை ஈடுபடுத்துதல்’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் கடல்சார் பல்லுயிர்ப் பெருக்க வரைபடமாக்கல் மீதான ஒரு முன்னெடுப்பானது, சுற்றுச்சூழல் சார் டிஎன்ஏ (eDNA) மாதிரியைப் பயன்படுத்தி 21 உலகப் பாரம்பரியத தளங்களில் சுமார் 4,500 இனங்களை அடையாளம் கண்டுள்ளது.
இந்தத தளங்களில் 70 சதவீதத்திற்கும் மிகஅதிகமானவை பருவநிலை மாற்றத்தினால் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதோடு மேலும் இந்தப் பகுதிகள் அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள சுமார் 35% கடல் வாழ் இனங்களைக் கொண்டுள்ளன.
மிகவும் மோசமான ஒரு பருவநிலை மாற்றச் சூழ்நிலையில், இந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து மீன் இனங்களும் அவற்றின் வெப்ப சகிப்புத்தன்மை வரம்புகளை விஞ்சக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
SSP 8.5 அல்லது 'வழக்கம் போலான சூழல்' போக்கு எனவும் அழைக்கப்படும் இந்த ஒரு சூழ்நிலையானது நீடித்தால், நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 4.4 ° C ஆக உயரும் என்று குறிப்பிடுகிறது.