TNPSC Thervupettagam

பெருங்கடல்களுக்கான பத்தாண்டு கால இலக்கு மாநாடு 2024

April 30 , 2024 243 days 277 0
  • 2024 ஆம் ஆண்டு பெருங்கடல் பத்தாண்டு கால மாநாடு ஆனது ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவில் நடைபெற்றது.
  • இது ஸ்பெயின் நாட்டு அரசாங்கம் மற்றும் யுனெஸ்கோ அமைப்பின் அரசுகளுக்கு இடையேயான கடல்சார் ஆணையம் ஆகியவற்றினால் நடத்தப்பட்டது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டிற்கான பெருங்கடல் அறிவியலின் பத்தாண்டு கால (2021-2030) இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை மதிப்பிடுவதையும், பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு "நாம் விரும்பும் வகையிலான பெருங்கடலுக்கு தேவையான அறிவியலை வழங்குதல்" என்பதாகும்.
  • இந்த நிகழ்வின் போது, பிராந்தியம் சார்ந்த கடல் கண்காணிப்பு மையத்தை நிறுவச் செய்வதற்கான கருத்தினை இந்தியா முன்வைத்தது.
  • மேலும் இது மக்களை மையமாகக் கொண்ட பலவகைப் பேரழிவுகளுக்கான பல்வேறு முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் கரையோரப் பகுதிகளின் பேரிடர் நெகிழ் திறனை அதிகரிக்கத் தகவமைப்பு திட்டமிடல் உத்திகளை வடிவமைக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்