பெருசெட்டஸ் கோலோசஸ் எனப்படும் திமிங்கலத்தின் பகுதியளவிலான எலும்புக் கூடு பெரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த திமிங்கலம் ஆனது இதுவரை வாழ்ந்தவற்றிலேயே அதிக எடையுள்ள ஒரு விலங்காக இருக்கலாம் என்று கருதப் படுகிறது.
இந்த விலங்கு ஆனது சுமார் 20 மீட்டர் (65 அடி) நீளமானது.
நவீன கால நீலத் திமிங்கலம் ஆனது வெகு காலமாக மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட விலங்காக கருதப்படுகிறது.
கின்னஸ் உலக சாதனைப் புத்தக பதிவின் படி, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப் பெரிய நீல திமிங்கலம் 190 டன் எடை கொண்டது.
ஆனால் இந்த பண்டைய காலத் திமிங்கலத்தின் எடையானது 85 முதல் 340 டன்கள் வரை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.