TNPSC Thervupettagam

பெருத்த அண்ட வெடிப்பு கண்டுபிடிப்பு

October 31 , 2017 2615 days 1043 0
  • 3 விண்வெளி சார்ந்த ஆய்வகங்களான அஸ்ட்ரோசாட் சந்திரா மற்றும் ஹம்பிள் விண்வெளி தொலைநோக்கி மற்றும் நிலத்திலுள்ள ஆய்வகமான HARPS ஆகியவை ஒரே சமயத்தில் அருகில் இருக்கும் கிரக நட்சத்திரமான ப்ரெக்ஸிமா செண்டரியில் பெருத்த ஒளிவட்ட வெடிப்பு ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர்.
  • பிராக்சிமா சென்டரி நட்சத்திர குழுக்கள் பூமி போன்ற வசிக்கும் கோள்களை தமது வசிப்பிடத்தை சுற்றிவரும் பகுதிக்குள்ளே கொண்டுள்ளது.
  • இது பிராக்சிமா சென்டரியை சுற்றிவரும் பூமி போன்ற கிரகங்களின் நிலையை ஆய்வு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். சூரியனிடமிருந்து25 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள பிராக்சிமா சென்டரி நட்சத்திர தொகுதியை பற்றி ஆய்வு செய்வதற்காக இந்தியா, அமெரிக்கா, சிலி, பிரான்ஸ், மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் பங்கு பெற்றுள்ளனர். அந்த ஆராய்ச்சியின் போது பெரும் சுடரொளி வீச்சு அனைத்து தொலைநோக்கிகள் மூலமாகவும் கண்டறியப்பட்டது.
  • பிராக்சிமா சென்டரி என்பது சுடரொளி வீச்சிற்காக நன்கு அறியப்பட்ட நட்சத்திரமாகும். காந்த மறுதொடர்பின் / மறு சீரமைப்பின் விளைவாக பெரும் அளவிலான சக்தி வெளியிடப்படுகிறது. இவை ஒரு சில நிமிடம் முதல் பல மணி நேரம் வரை சுடரொளி வீச்சை வெளிப்படுத்தும் திறன் கொண்டவையாகும்.
  • அஸ்ட்ரோசாட் என்பது பல்வேறு அலைநீளமுடைய ஒளிக்கதிர்களை உள்வாங்கி செயல்படும் செயற்கைகோள். இச்செயற்கைகோள் பல்வேறு நிறுவனங்கள் ஒன்றிணைந்து உருவாக்கியதாகும். இஸ்ரோ செயற்கை கோள் மையம் (பெங்களூர்), Tata Institute of Fundamental Research (TIFR) – மும்பை, Indian Institute of Astrophysics (IIA) – பெங்களுரூ, விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் – திருவனந்தபுரம், Inter-University Centre for Astronomy and Astrophysics (IUCCA) – பூனே, விண்வெளி பயன்பாட்டு மையம் – அகமதாபாத், லீஸ்டர் பல்கலைக்கழகம் (இங்கிலாந்து) கனடா விண்வெளி மையம் ஆகியவை இணைந்து இச்செயற்கைகோளை உருவாக்கியுள்ளன.
  • சந்திரா திட்டமானது நாசாவின் அமெரிக்காவின் அலாபாமா மார்செல் விண்கல மையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த விண்கல செயல்பாடுகள் மற்றும் சந்திரா அறிவியல் ஆகியன அமெரிக்காவிலுள்ள மசாசுட்டிஸின் கேம்பிரிட்ஜிலுள்ள சிமித்சானியன் வானியற்பியல் ஆய்வகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்