பெருநகர சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை 2025-26
March 22 , 2025 9 days 63 0
பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) ஆனது, வரி மற்றும் வர்த்தகம் மீதான உரிமக் கட்டணங்களுக்கான QR குறியீடு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 8,267.17 கோடி ரூபாய் என்ற அளவில் மொத்த வரவினையும் 8,404.7 கோடி ரூபாய் என்ற அளவில் மொத்தச் செலவினையும் கொண்டுள்ளது.
இதன் மன்ற உறுப்பினர்களின் மன்ற/வார்டு மேம்பாட்டு நிதி ஆனது ஒரு மன்றத்திற்கு 50 லட்சம் ரூபாயிலிருந்து 60 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.
மேயரின் சிறப்பு மேம்பாட்டு நிதியானது 3 கோடி ரூபாயிலிருந்து 4 கோடி ரூபாயாக உயர்த்தப் படும்.
இங்கு 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் காயமடைந்த செல்லப் பிராணிகளுக்கான ஒரு சிறப்பு அவசரச் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் தற்போதைய விலங்குப் பிறப்புக் கட்டுப்பாடு மையங்களுக்குள் தலா 15 லட்சம் ரூபாயில் 10 புதிய கால்நடை மருத்துவமனைகள் கட்டப் படும்.
ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்துவதற்காகச் சிறப்பு வகுப்புகளை நடத்தச் செய்வதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில் போட்டித் தேர்வு விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கான பல ஊக்கத் தொகைகளுக்கு 40.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
வாட்ஸ்அப் அடிப்படையிலான தகவல் தொடர்பு மூலம் குடிமக்கள் சேவைகள், குறை தீர்ப்புச் சேவைகள் மற்றும் தானியங்கியில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs) ஆகியவற்றை எளிதாக்குவதற்காக 4.46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.