பெருநிறுவன விவகாரத்திற்கான இந்திய நிறுவனம் திட்டம்
November 24 , 2017 2587 days 1001 0
பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவையானது பெருநிறுவன விவகாரத்திற்கான இந்திய நிறுவன திட்டம் (Scheme on Indian Institute of Corporate Affairs) அடுத்த மூன்று நிதி ஆண்டுகள் (FY 2017-18 to 2019-20) வரை தொடர அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் பெருநிறுவன விவகாரத்திற்கான இந்திய நிறுவனம் (IICA- Indian Institute of Corporate Affairs) தேசிய முக்கியத்துவம் (Institute of National Importance) வாய்ந்த நிறுவனமாக உருவாகும்.
IICA ஆனது மத்திய பெருநிறுவன விவாகரத்துறை அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs) அதிகார வரம்பின் கீழ் செயல்படும் ஓர் நிறுவனமாகும்.
இது 2008-ல் குருகிராமில் உள்ள மானேசரில் அமைக்கப்பட்டது.
இது முக்கிய அமைச்சகங்களுக்கு ஆலோசனை வழங்கிட சிந்தனையாளர் குழுவாக முறையாக ஏற்படுத்தப்பட்ட முதல் இந்திய நிறுவனமாகும்.
பெருநிறுவன சட்டங்கள், பெருநிறுவன நிர்வாகம், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுகள் பொறுப்புணர்வுகளை (CSR – Corporate Social Responsibility), கணக்கீட்டு தரம், முதலீட்டாளர் கல்வி போன்ற பல்வேறு தளங்களில் பங்கு தாரர்களுக்கு இது சேவையை வழங்குகிறது.
IICA-ல் உள்ள பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுகளுக்கான தேசிய அறக்கட்டளையானது (Nation Foundation for Corporate Social Responsibility) நாடு முழுவதும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுகளை நிர்வகிக்கப் பொறுப்புடையதாகும்.