3,000 கோடி ஆரம்ப நிதியுடன் மாற்று முதலீட்டு நிதி (AIF) வடிவிலான பெருநிறுவனக் கடன் சந்தை மேம்பாட்டு நிதியினை உருவாக்க இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் முடிவு செய்துள்ளது.
இது நெருக்கடியின் போது முதலீட்டு தர பெருநிறுவனக் கடன் பத்திரங்களை வாங்கச் செய்வதற்கான குறுகிய கால கடன் வசதியாக செயல்படும்.
இந்த நடவடிக்கையானது, பெருநிறுவனக் கடன் பத்திரச் சந்தையின் பங்கேற்பாளர் நபர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதையும் பொதுவாக இரண்டாம் நிலை சந்தையின் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.