TNPSC Thervupettagam

பெருநிறுவனங்களுக்கான வரிக் குறைப்பு

September 21 , 2019 1895 days 704 0
  • பெருநிறுவன வரி விகிதங்களில் அதிக அளவிலான வரிக் குறைப்புகளை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
  • தனியார் முதலீட்டை புதுப்பிப்பதையும் கடந்த ஆறு ஆண்டு காலமாக நிலவி வரும் குறைவான வளர்ச்சியை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு ரூ 1.45 லட்சம் கோடி மதிப்பிலான ஊக்கத் தொகையை அவர் அறிவித்துள்ளார்.

நிறுவனத்தின் வகை

விகிதம்

எந்தவொரு வரி விலக்கையும் / ஊக்கத்தையும் பெறாத உள்நாட்டு நிறுவனங்களுக்கான அடிப்படை பெரு நிறுவன வரி விகிதம்.

 

30% இலிருந்து 22% ஆகக் குறைக்கப்பட்டது.

திறனுள்ள வரி விகிதம்: 25.17%

உற்பத்தித் துறையில் புதிய முதலீடு செய்யும்வகையில்  2019 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அல்லது அதற்குப் பிறகு பதிவு செய்யப்படும் உள்நாட்டு நிறுவனங்கள்.

25% இலிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டது

  • குறைந்தபட்ச மாற்று வரி  ஆனது 18% இலிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • மூலதன ஆதாயங்களுக்கான கூடுதல் கட்டணம் திரும்பப் பெறப்படுகின்றது.
  • பெருநிறுவன வரி விகிதக் குறைப்பு மற்றும் பிற ஊக்கத் தொகைகளுக்கான மொத்த வருவாய் 1.45 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்