ஷிமிட் பெருங்கடல் பயிற்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியாவின் பெருந் தடுப்புப் பவளத் திட்டில் (Great Barrier Reef) இருந்து பிரிந்துள்ள ஒரு பெரிய பவளப் பாறைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 120 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்.
அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் என்ற கட்டிடத்தை விட இந்தப் பாறை உயரமாக உள்ளது.
பிரிக்கப்பட்ட இந்த திட்டுகள் கடல் தளத்தோடு சேர்ந்தே உள்ளது. ஆனால் அவை பெருந் தடுப்புப் பவளத் திட்டின் முக்கிய பாகத்தின் ஒரு பகுதியாக இல்லை.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பிரிக்கப்பட்ட பாறைகளுடன் சேர்த்து, இப்போது மொத்தமாக எட்டு பிரிக்கப்பட்ட பாறைகள் உள்ளன.