TNPSC Thervupettagam

பெருந்தடுப்புப் பவளத் திட்டுகளில் 4வது உலகளாவிய மாபெரும் பவளப் பாறை நிறமாற்ற நிகழ்வுகள்

March 16 , 2024 125 days 198 0
  • ஒரு மாபெரும் பவளப்பாறை நிறமாற்ற நிகழ்வு ஆனது, ஆஸ்திரேலியாவில் உள்ள பெருந் தடுப்புப் பவளத் திட்டினை (GBR) சூழ்ந்துள்ளது.
  • இந்தப் பவளத் திட்டானது இத்தாலியை விட பெரிய பரப்பளவில் பரவியுள்ளது.
  • பருவநிலை மாற்றம் என்பது பெருந்தடுப்புப் பவளத் திட்டு மற்றும் உலகின் பெருங் கடல்களில் உள்ள இதரப் பவளப்பாறை சூழல் அமைப்புகளுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
  • பெருந்தடுப்புப் பவளத் திட்டானது 2,300 கி.மீ. வரை நீண்டுள்ளது மற்றும் சுமார் 3,000 தனித்தனி திட்டுகளால் ஆனது.
  • கடந்த காலங்களில் பவளப்பாறை நிறமாற்ற நிகழ்வு ஆனது 1998 ஆம் ஆண்டில் தொடங்கி 2002, 2016, 2017, 2020, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நிலையில், 2024 ஆம் ஆண்டில் சமீபத்திய பவளப்பாறை நிறமாற்ற நிகழ்வு பதிவானது.
  • தற்போதைய பவளப்பாறை நிறமாற்ற நிகழ்வு ஆனது கடந்த எட்டு ஆண்டுகளில் பதிவான ஐந்தாவது நிறமாற்ற நிகழ்வைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்