TNPSC Thervupettagam

பெருந்தொற்று திட்டம் மற்றும் சீர்தரச் செயல்பாட்டு முறைமை

April 4 , 2024 238 days 190 0
  • 286வது சட்ட ஆணைய அறிக்கையானது, எதிர்காலத்தில் ஏற்படும் பல்வேறு பெருந் தொற்றுகளை எதிர்கொள்வதற்காக ஒரு பெருந்தொற்றுத் திட்டம் மற்றும் சீர்தரச் செயல்பாட்டு முறைமையினை உருவாக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளது.
  • இது 1897 ஆம் ஆண்டு பெருந்தொற்றுச் சட்டத்தின் (EDA) வரம்புகளை இது எடுத்து உரைக்கிறது.
  • "பெருந்தொற்றுகளின் மேலாண்மை, கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஆகியவற்றை ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையானச் சட்டத்தின் மூலம் நிர்வகிக்க முடியாது" என்று அந்த அறிக்கையானது எடுத்துரைக்கிறது.
  • பெருந்தொற்று ஏற்படும் போது மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளின் அதிகாரங்களுக்கு இடையே தெளிவான வரையறை நிர்ணயிக்கப்படவில்லை என்ற நிலையில் இது ஒருங்கிணைக்கப்படாத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது.
  • ஒரு சீர்தரச் செயல்பாட்டு முறைமை (SOP) உருவாக்கப்பட்டால், பொது சுகாதார அவசர நிலையின் போது முன் வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பங்களிப்புகளுடன் எந்தவொரு பெருந்தொற்றிற்கும் சரியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்ய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்