TNPSC Thervupettagam

பெருந்தொற்று நிதி திட்டம்

November 1 , 2024 24 days 75 0
  • கால்நடைகளுக்கான ஒரு முழுமையான சுகாதாரக் காப்பீட்டை உருவாக்குவதற்காக 25 மில்லியன் டாலர் மதிப்பிலான G20 பெருந்தொற்று நிதியை மத்திய அரசு செயல் படுத்த உள்ளது.
  • விலங்கினச் சுகாதார ஆய்வகங்களை நன்கு மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் மற்றும் ஆய்வக வலையமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் "விலங்கு சுகாதாரப் பாதுகாப்பை" மேம்படுத்துவதற்காக இது வடிவமைக்கப் பட்டு உள்ளது.
  • இது "விலங்குவழித் தொற்று" நோய்களைக் கண்காணிப்பதற்கும் அவற்றை மிக நன்கு மேலாண்மை செய்வதற்குமான நன்கு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கும்.
  • இந்த நிதித் திட்டமானது, ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB), உலக வங்கி மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்