மத்திய நிலக்கரி, இரயில்வே, நிதி & பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் நிலக்கரி சுரங்க கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு (CMSMS - Coal Mine Surveillance & Management System) மற்றும் கைபேசி செயலி ‘கான் பிரகாரி‘ ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
இந்த செயலி நிலக்கரி இந்தியா லிட் (Coal India Ltd) மற்றும் பாஸ்கராச்சார்யா விண்வெளி பிரயோகம் மற்றும் புவியியல் - தகவலியல் நிறுவனம் (Bhaskaracharya Institue of Space Application and Geo-informatics - BISAG) ஆகியவற்றின் துணை நிறுவனமான மத்திய சுரங்க திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்பு நிறுவத்தினால் (CMPDI-Central Mine Planning & Design Institute) உருவாக்கப்பட்டதாகும்.
CMSMS என்பது அங்கீகரிக்கப்படாத இடங்களில் நடைபெறும் சுரங்க வேலைகளை கண்டுபிடித்துக் காட்டும் வலைதள அடிப்படையிலான புவியியல் தகவலியல் அமைப்பு செயலி ஆகும்.
இந்த அமைப்பில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படை தளமானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வரைபடம் (நில வரைபடம்) ஆகும். இந்த வரைபடம் கிராமப்புற நிலையிலான தகவல்களை தரும்.
கான் பிரகாரி, பக்கத் துளை சுரங்க வேலை, திருட்டு போன்ற சட்ட விரோத நிலக்கரி சுரங்க வேலைகளைப் பற்றிய நடவடிக்கைகளை தெரியப்படுத்தும் ஒரு கருவியாகும்.