TNPSC Thervupettagam

பெரும் எண்ணிக்கையிலான காவல்துறைக்கான சீர்திருத்தங்களை உபயோகிக்கும் முறை - உச்சநீதிமன்றம்

July 7 , 2018 2207 days 611 0
  • பெரும் எண்ணிக்கையிலான நாட்டில் காவல்துறைக்கான சீர்திருத்தங்களை உபயோகிக்கும் முறைகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு அனுமதி அளித்துள்ளது.
  • இது எல்லா மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஏதேனும் ஒரு காவல்துறை அலுவலரை தற்காலிக காவல்துறை பொது இயக்குநராக நியமிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
  • இந்த உத்தரவில் சாத்தியமான நபர்களை காவல்துறை பொது இயக்குநர் (அ) காவல்துறை ஆணையராக நியமிக்க எல்லா மாநிலங்களையும் மூத்த காவல்துறை அலுவலரின் பெயர்களை UPSC-க்கு (Union Public Service Commission) அனுப்ப கூறியுள்ளது.
  • இதையொட்டி UPSC மிகவும் பொருத்தமான மூன்று அலுவலர்களைக் கொண்ட பட்டியலை தயாரிக்கும். இதனால் மாநிலங்கள் இயல்பாக அதிலிருந்து ஒருவரை காவல்துறை தலைவராக நியமிக்க இயலும்.
  • காவல்துறை சீர்திருத்தங்களுக்கான வரலாற்று சிறப்புமிக்க 2006 தீர்ப்பில் ஒரு பகுதியின் திருத்தத்தினை நாடும் மத்திய அரசின் மனுவினை நீதிமன்றம் விசாரித்தது.
  • செப்டமபர் 22, 2006 அன்று மத்திய அரசிற்கும் பிரகாஷ் சிங்கிற்கும் இடையேயான வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை வழங்கியது.
    • மாநில அளவில் மாநில பாதுகாப்பு குழுவை அமைத்தல்.
    • குறைந்தபட்ச 2 வருட பதவிகாலம் வகிக்கும் காவல்துறை பொது இயக்குநரின் நியமனத்தின் வெளிப்படையான செயல்முறைகள்.
    • செயல்பாட்டு கடமைகள் கொண்ட மற்ற காவல்துறை அலுவலர்களான காவல்துறை கண்காணிப்பாளர்களும் குறைந்தபட்சம் 2 வருட பதவிகாலத்தில் இருக்கலாம்.
    • காவல்துறை கழக ஸ்தாபனத்தினை நிறுவுதல், இந்த ஸ்தாபனம் காவல்துறை அலுவலர்கள் சம்பந்தமான இடமாற்றம், நியமித்தல், பதவி உயர்வு மற்றும் இதர சேவைகள் தொடர்பான முடிவுகளை எடுக்கும்.
    • மத்திய காவல்துறை அமைப்பின் (CPO - Central Police Organisations) தலைவரைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் வேலைவாய்ப்பிற்கான குழுவினை மத்திய அளவில் தயார் செய்வதற்கு தேசிய பாதுகாப்பு குழுவினை நிறுவுதல்.
    • புலனாய்வினைப் பிரித்தல், காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளின் செயல்பாடுகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்