TNPSC Thervupettagam

பெரும் பூனை இனங்களுக்கான உலக நாடுகளின் கூட்டமைப்பு

March 11 , 2023 498 days 278 0
  • பெரும் பூனை இனங்களுக்கானப் பாதுகாப்பிற்காக வேண்டி இந்தியா தனது தலைமையில் ஒரு மாபெரும் உலகளாவியக் கூட்டணியைத் தொடங்குவதற்கு முன் மொழிந்துள்ளது.
  • மேலும், ஐந்தாண்டுகளுக்கு 100 மில்லியன் டாலர் (ரூ. 800 கோடிக்கு மேல்) நிதியுதவி வழங்க உள்ளதாகவும் இந்தியா உறுதி செய்தது.
  • இந்த சர்வதேச பெரும் பூனை இனங்களுக்கான கூட்டமைப்பானது புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், பனிச் சிறுத்தைகள், பூமா (மலையரிமா), ஜாகுவார் மற்றும் சிவிங்கிப் புலிகள் போன்ற ஏழு பெரும் பூனை இனங்களின் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
  • அதன் முக்கிய நடவடிக்கைகளில் “சட்டம், கூட்டாண்மை, அறிவுசார் இணைய தளம், திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா, நிபுணர் குழுக்களுக்கு இடையேயான கூட்டாண்மை மற்றும் நிதி வழங்கீடு” ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்