பெரும் பூனை இனங்களுக்கான உலக நாடுகளின் கூட்டமைப்பு
March 11 , 2023 630 days 345 0
பெரும் பூனை இனங்களுக்கானப் பாதுகாப்பிற்காக வேண்டி இந்தியா தனது தலைமையில் ஒரு மாபெரும் உலகளாவியக் கூட்டணியைத் தொடங்குவதற்கு முன் மொழிந்துள்ளது.
மேலும், ஐந்தாண்டுகளுக்கு 100 மில்லியன் டாலர் (ரூ. 800 கோடிக்கு மேல்) நிதியுதவி வழங்க உள்ளதாகவும் இந்தியா உறுதி செய்தது.
இந்த சர்வதேச பெரும் பூனை இனங்களுக்கான கூட்டமைப்பானது புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், பனிச் சிறுத்தைகள், பூமா (மலையரிமா), ஜாகுவார் மற்றும் சிவிங்கிப் புலிகள் போன்ற ஏழு பெரும் பூனை இனங்களின் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
அதன் முக்கிய நடவடிக்கைகளில் “சட்டம், கூட்டாண்மை, அறிவுசார் இணைய தளம், திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா, நிபுணர் குழுக்களுக்கு இடையேயான கூட்டாண்மை மற்றும் நிதி வழங்கீடு” ஆகியவை அடங்கும்.